/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஏழாயிரம்பண்ணை ஜவுளிக்கடையில் திருட்டு
/
ஏழாயிரம்பண்ணை ஜவுளிக்கடையில் திருட்டு
ADDED : டிச 20, 2024 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: ஏழாயிரம்பண்ணை ராஜிவ் நகரை சேர்ந்தவர் தங்கப்பாண்டியன், 49. சாத்துார் - ஏழாயிரம் பண்ணைரோட்டில் அன்பின் நகரம் விலக்கில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
டிச. 16இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை கடைக்கு சென்று பார்த்தபோது ஷட்டர் பூட்டை உடைத்து ரூ.18,800 மதிப்பிலான ரெடிமேட் துணிகளை திருடிச் சென்றது தெரிந்தது.
ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.