/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர டாக்டர்கள் இல்லை 108 ஆம்புலன்ஸ் வசதி தேவை

ADDED : டிச 08, 2025 05:14 AM
திருச்சுழி: திருச்சுழி அருகே பரளச்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர டாக்டர்கள் இல்லாததால் அவசர சிகிச்சைக்கு வரும் மக்கள் அவதிப்பட வேண்டி உள்ளது.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பரளச்சியில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் 30 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்தப் பகுதியில் 50 க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வசதியாக இருந்தது. இங்கு பகல் நேரத்தில் டாக்டர்கள் ,நர்சுகள் உள்ளனர். இரவு நேரத்தில் டாக்டர்கள் இல்லாததால் அவசர சிகிச்சைக்கு மக்கள் திணற வேண்டி உள்ளது. இதனால் 15 கி.மீ., தூரமுள்ள எம்.ரெட்டியபட்டி அல்லது அருப்புக்கோட்டைக்கு கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இதிலும் 108 ஆம்புலன்ஸ் வசதி இங்கு இல்லை. வேறொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் கூறி அங்கிருந்து வருவதற்கு கால தாமதம் ஆகிறது. ஆம்புலன்ஸ் இல்லாததால் சில சமயங்களில் உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நலன் கருதி பரளச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் டாக்டர்களை பணியில் அமர்த்தியும், 108 ஆம்புலன்ஸ் வசதி உடன் கிடைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.