/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு, வாறுகால் இல்லை, தெருநாய்கள் தொல்லை அவதியில் சூலக்கரை மேடு வ.உ.சி., நகர் மக்கள்
/
ரோடு, வாறுகால் இல்லை, தெருநாய்கள் தொல்லை அவதியில் சூலக்கரை மேடு வ.உ.சி., நகர் மக்கள்
ரோடு, வாறுகால் இல்லை, தெருநாய்கள் தொல்லை அவதியில் சூலக்கரை மேடு வ.உ.சி., நகர் மக்கள்
ரோடு, வாறுகால் இல்லை, தெருநாய்கள் தொல்லை அவதியில் சூலக்கரை மேடு வ.உ.சி., நகர் மக்கள்
ADDED : பிப் 03, 2025 04:53 AM

விருதுநகர்: குறுக்குத்தெருக்களில் ரோடு, வாறுகால் இல்லை, மின்விளக்குகள் பற்றாக்குறை, தெருநாய்கள் தொல்லை, அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம் தேவை என எண்ணற்ற பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர் விருதுநகர் சூலக்கரை மேடு வ.உ.சி., நகர் மக்கள்.
விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட சூலக்கரை மேட்டில் வ.உ.சி., நகரில் 1000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.
தாதம்பட்டி ரோட்டில் உள்ள அரசு காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி அருகே போதிய அளவில் மின்விளக்குகள் இல்லாததால் இரவில் இவ்வழியாக செல்வதற்கே அஞ்சுகின்றனர்.
தெருக்களிலும் மின்விளக்குகளின் தேவை உள்ளது. இப்பள்ளி அருகே ரோடு ஓரத்தில் குப்பை கொட்டி கிடங்காக மாற்றியுள்ளனர். இதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.
இங்குள்ள குறுக்குத்தெருக்களில் ரோடு, வாறுகால் அமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலத்தில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், மழை நீர் சேர்ந்து ரோட்டில் ஆறாக ஓடுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இப்பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இவை ரோட்டில் நடந்து செல்பவர்கள், விளையாடும் குழந்தைகள், சைக்கிள், டூவீலரில் செல்பவர்களை துாரத்தி சென்று கடிக்கிறது.
இவற்றின் தொல்லையால் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே மக்கள் அஞ்சுகின்றனர். இங்கு குழந்தைகளுக்கான அங்கன்வாடிமையமும், ஆரம்ப சுகாதார நிலையமும் இல்லை. குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்து வருவதால் தேவை ஏற்பட்டுள்ளது.
ரோடு, வாறுகால் இல்லை
-ராமர், தொழிலாளி: வ.உ.சி., நகரில் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு ரோடு, வாறுகால் அமைக்க வேண்டும் என தொடர்ந்து தெரிவித்து வருகிறோம்.
மழைக்காலத்தில் ஏற்படும் சிரமத்தை போக்க ரோடு, வாறுகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுகாதார நிலையம் வேண்டும்
சுப்புலட்சுமி, குடும்பத் தலைவி: அரசு காதுகேளாதோர் பள்ளி பகுதியில் போதிய அளவில் மின்விளக்குகள் இல்லை. மேலும் அங்கன்வாடிமையம், ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.-
தெருநாய்கள் தொல்லை
பத்மாவதி, குடும்பத் தலைவி: தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இவை ரோட்டில் நடந்து செல்லும் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள், சைக்கிள் டூவீலரில் செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.