/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உழவர் சந்தையில் விலை பட்டியல் இருக்கு: காய்கறிகள் இல்லை
/
உழவர் சந்தையில் விலை பட்டியல் இருக்கு: காய்கறிகள் இல்லை
உழவர் சந்தையில் விலை பட்டியல் இருக்கு: காய்கறிகள் இல்லை
உழவர் சந்தையில் விலை பட்டியல் இருக்கு: காய்கறிகள் இல்லை
ADDED : பிப் 05, 2025 11:56 PM
காரியாபட்டி; காரியாபட்டி உழவர் சந்தையில் விலைப்பட்டியல் இருக்கு, காய்கறிகள் இல்லை. காய்கறிகள் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டியில் மலிவான விலையில், தரமான காய்கறிகள் கிடைக்க உழவர் சந்தை ஏற்படுத்தப்பட்டது.
தோட்டங்களில் காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளை கணக்கெடுத்து நேரடியாக விற்பனை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
துவக்கத்தில் பஸ் வசதி செய்யப்பட்டது.
காய்கறிகளை எளிதில் சந்தைக்கு கொண்டு வந்தனர். அன்றாட காய்கறிகள் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கவும், விவசாயிகள் பாதிக்காத அளவிற்கு விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்பட்டது. மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
நன்றாக இயங்கி வந்த நிலையில், நாளடைவில் விவசாயிகளுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காய்கறிகள் கொண்டு வருவதை தவிர்த்தனர். உழவர் சந்தை தற்போது வெறிச்சோடி கிடக்கிறது. காய்கறிகளின் விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் காய்கறிகள் இல்லை.
தற்போது கிராமப்புறங்களில் ஏராளமான தோட்டங்களில் காய்கறிகளை பயிரிட்டு விவசாயிகள் வெளிச் சந்தைக்கு கொண்டு செல்கின்றனர்.
விவசாயிகளை சந்தித்து, உழவர் சந்தைக்கு காய்கறிகளை கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.