/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு இல்லை, சேதமான மின்கம்பங்கள் அவதியில் விருதுநகர் பவளமல்லித்தெரு மக்கள்
/
ரோடு இல்லை, சேதமான மின்கம்பங்கள் அவதியில் விருதுநகர் பவளமல்லித்தெரு மக்கள்
ரோடு இல்லை, சேதமான மின்கம்பங்கள் அவதியில் விருதுநகர் பவளமல்லித்தெரு மக்கள்
ரோடு இல்லை, சேதமான மின்கம்பங்கள் அவதியில் விருதுநகர் பவளமல்லித்தெரு மக்கள்
ADDED : பிப் 17, 2025 05:59 AM

விருதுநகர் : கற்கள் அமைத்தும் முடிக்கப்படாத ரோடு பணி, சேதமான மின்கம்பங்கள், புற்கள் அடர்ந்து வளர்ந்த வாறுகால்கள், மின்விளக்குகள் பற்றாக்குறை என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் விருதுநகர் ஆர்.எஸ்., நகர் பவளமல்லித்தெரு மக்கள்.
விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட ஆர்.எஸ்., நகரில் பவளமல்லித்தெரு உள்ளது. இங்கு 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு புதிதாக ரோடு அமைப்பதற்காக கற்கள் பரப்பும் பணிகள் நடந்தது. ஆனால் பணிகள் முடிக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதனால் ரோட்டில் செல்லும் டூவீலர்கள், சைக்கிள், நடந்து செல்பவர்கள் கற்கள் இடறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதற்கு பக்கத்து தெருவிலும் ரோடு அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மின்கம்பங்கள் அமைத்து 10 ஆண்டுகளை கடந்து இருப்பதால் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் பல மின்கம்பங்கள் சேதமாகி விழும் நிலையில் உள்ளது. மின்விளக்குள் போதிய அளவில் அமைக்கப்படாததால் இரவில் இருள் சூழ்ந்து இருப்பதால் வெளியே செல்வதற்கே மக்கள் அஞ்சுகின்றனர்.
வாறுகால்களில் புற்கள் வளர்ந்து நிறைந்து உள்ளது. இதனால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும் வீட்டின் முன்பு செல்லும் மின்ஒயர்களுக்கு இடையூறாக இருக்கும் மரக்கிளைகளை மின்வாரிய பணியாளர்கள் வெட்டி அப்படியே வீட்டின் முன்பு போட்டு விட்டு செல்கின்றனர். இவற்றை அகற்ற முடியாமல் வீட்டின் உரிமையாளர்கள் திண்டாடி வருகின்றனர்.
ரோடு அமைக்க வேண்டும்
சரவணன், கல்லுாரி பேராசிரியர்: பவளமல்லித்தெருவில் ரோடு அமைப்பதற்காக கற்கள் பரப்பி பல மாதங்களாகிறது. ஆனால் இதுவரை ரோடு அமைக்கும் பணிகள் முடிக்கப்படவில்லை. இதனால் மக்கள் தினமும் திண்டாடி வருகின்றனர். எனவே பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்கள், குழந்தைகள் அவதி
கனகவேல், தனியார் ஊழியர் (ஓய்வு): ரோடு அமைக்கப்படாததால் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் நடந்து செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். மில் வேலைக்கு சென்று வருபவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பலரும் கால் வலி ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின்விளக்குகள் பற்றாக்குறை
ரவிந்திரன், நகர்நல அமைப்புத் தலைவர்: இப்பகுதியில் போதிய அளவில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. மின்கம்பங்களும் சேதமான நிலையில் உள்ளது. வாறுகால்களில் முட்புதர்கள் வளர்ந்துள்ளது. எனவே தேவைக்கு ஏற்ப கூடுதல் மின்கம்பங்கள் அமைத்து, வாறுகால்களில் கழிவு நீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.