/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நுாறு நாள் வேலை திட்டத்தில் சம்பளம் இல்லை
/
நுாறு நாள் வேலை திட்டத்தில் சம்பளம் இல்லை
ADDED : பிப் 14, 2025 06:22 AM
சாத்துார்: சாத்துார் ஓ.மேட்டுப் பட்டியில் நுாறு நாள் வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு 10 வாரங்களுக்கு மேலாக சம்பளம் ஏறாததால் பணியாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ஓ.மேட்டுப்பட்டி ஊராட்சியில் நுாறு நாள் வேலை உறுதி திட்டத்தின்கீழ் பலர் கண்மாய் நீர் வரத்து கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஊராட்சியில் வளர்க்கப்படும் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும்பணியிலும் ஆண்கள் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சியில் உள்ள மக்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்து வரும் நிலையில் இவர்களுக்கு தினக்கூலியாகரூ.280 வழங்கப்படுகிறது.
ஒரு வாரம் பணி செய்த முடிந்தவுடன் மறுவாரம் பணிக்குச் செல்லும் முன் வழக்கமாக அவரவர் வங்கிக் கணக்கில் சம்பளம் பணம் வரவு வைக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 10 வாரங்களாக சம்பளம் தங்கள் கணக்கில் வரவு வைக்கப்படாததால் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து 100நாள் வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் தாமதமின்றி சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

