ADDED : பிப் 16, 2026 06:46 AM
அ நிறம் | அளவு
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மலையேறும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு திருச்செந்தூர் குரும்பூரைச் சேர்ந்த சுடலை 60, உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் குரும்பூரைச் சேர்ந்தவர் சுடலை 60. இவர் நேற்று மகாசிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரியில் தரிசனம் செய்ய வந்தார்.
இவர் நேற்று காலை அடிவாரத்தில் இருந்து மலையேறும் போது இரட்டை லிங்கம் என்ற இடத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவரது உடலை நேற்று மதியம் 2:30 மணிக்கு வனத்துறையினர், போலீசார் மீட்டு அடிவாரம் கொண்டு வந்தனர். பின் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
