/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருக்குறள் என்றைக்கும் பொதுவான இலக்கியம்--
/
திருக்குறள் என்றைக்கும் பொதுவான இலக்கியம்--
ADDED : டிச 21, 2024 05:15 AM

ராஜபாளையம் : திருக்குறள் எழுதப்பட்டதின் நோக்கமே அது என்றைக்கும் பொதுவான இலக்கியமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான், என கலெக்டர் ஜெயசீலன் மாணவர்களிடையே பேசினார்.
ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரியில் 'திருக்குறள் என்றைக்குமான இலக்கியம்' என்ற தலைப்பில் பேசுகையில், கடந்த 2000 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வு அறிக்கைகள் திருக்குறள் எழுதப்பட்டதின் நோக்கமே அது என்றைக்கும் பொதுவான இலக்கியமாக இருக்க வேண்டும் என கூறுகிறது.
உலகம் முழுவதும் அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட நுால்.
இது ஒரு பகுதிக்காக எழுதப்பட்ட இலக்கியம் கிடையாது. சங்க காலத்திற்கு பிறகு வந்த ஒரு நீதி நுால் என்று சொல்லக்கூடிய காலகட்டத்தில் எழுதப்பட்டது.
ஒழுக்கம் என்ற கோட்பாடு நாட்டிற்கு நாடு, மொழிக்கு மொழி மனிதர்கள் இடையே உள்ள வேறுபாடுகள் காலம் தோறும் வரும். சில நியதிகள் ஒருபோதும் மாறாது.
சமயம் சார்ந்த நுால்கள் ஒவ்வொரு நிறுவனமும் அதனை தொடர்ச்சியாக வழி நடத்திக் கொண்டிருக்கிறது.
திருக்குறள் மட்டும் கவனமாக எந்த ஒரு கட்டுக்குள்ளும் சென்று விடக்கூடாது என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது. மாணவர்கள் இதன் தத்துவங்களை அடுத்த 50 ஆண்டுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம், ரத்தின வெங்கடேசன், சிவகாசி கல்லுாரி முன்னாள் தமிழ்த்துறை தலைவர் சிவகணேசன் பேசினர்.
முதல்வர் ராமகிருஷ்ணன், செயலர் பிரகாஷ், தமிழ்த்துறை தலைவர் மைதிலி ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.