UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 11:21 PM

அ நிறம் | அளவு
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு திருப்பாவையை மையப்படுத்தி ஓவிய, பேச்சுப்போட்டி, ஒப்புவித்தல் போட்டிகள் நடந்தன. கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் பள்ளி மாணவர்களிடையே திருப்பாவை அறிமுகம் விழிப்புணர்வு குறித்து ஆண்டுதோறும் போட்டிகள் நடக்கிறது.
ராஜபாளையம் ருக்மணி அம்மாள் கலையரங்கில் திருப்பாவை ஒப்புவிப்பு, பேச்சு, கட்டுரை ஓவிய போட்டிகளில் 200 மாணவர்கள் பங்கேற்றனர். சரவண கார்த்தி தலைமை வகித்தார். அகத்தியர் தமிழ் சங்க தலைவர் அனிதா முன்னிலை விகித்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோதை நாச்சியார் தொண்டர் குழாம் செயலாளர் சரவண துரை பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை கோதை நாச்சியார் குழாம், அகத்தியர் தமிழ் சங்கத்தினர் செய்தனர்.
