தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திருத்தங்கல் ரயில்வே மேம்பால பணி நாளை துவக்கம்

 திருத்தங்கல் ரயில்வே மேம்பால பணி நாளை துவக்கம்

 திருத்தங்கல் ரயில்வே மேம்பால பணி நாளை துவக்கம்


ADDED : ஜன 17, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 05:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் ரயில்வே கிராசிங்கில் ரூ.45.6 கோடியில் ரயில்வே மேம்பாலம் பணியை நாளை ( ஜன.18)தங்கம் தென்னரசு பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கிறார்.

சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கல் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கு 2024ல் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் ரூ.62 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே மேம் பாலத்தை இரு மாதங் களுக்கு முன்பு பயன் பாட்டிற்கு வந்தது.

இதையடுத்து திருத்தங்கல் ரயில்வே கிராசிங்கில் 609 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தாயார் செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த ரூ.32 கோடியும், மேம்பால கட்டுமான பணிக்கு ரூ.45.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேம்பால கட்டுமான பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்ட நிலையில், மேம் பாலம் அமையும் இடத்தில் உள்ள குடிநீர் குழாய், மின்கம்பங்களை இடமாற்றம் செய்வது குறித்து அதி காரிகள் கடந்த வாரம் ஆய்வு செய்தனர்.

பூர்வாங்க பணிகள் முடிந்த நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (ஜன. 18) மேம்பால கட்டுமான பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கிறார்.

சிவகாசி சாட்சியா புரம் ரயில்வே மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்த இரு மாதங்களுக்குள், திருத்தங்கல் மேம்பாலம் பணி தொடங்க உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us