/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடிநீரை சேமித்து வைப்பவர்களே உஷார்! கோடையில் 'டெங்கு காய்ச்சல்'
/
குடிநீரை சேமித்து வைப்பவர்களே உஷார்! கோடையில் 'டெங்கு காய்ச்சல்'
குடிநீரை சேமித்து வைப்பவர்களே உஷார்! கோடையில் 'டெங்கு காய்ச்சல்'
குடிநீரை சேமித்து வைப்பவர்களே உஷார்! கோடையில் 'டெங்கு காய்ச்சல்'
ADDED : மே 15, 2025 12:36 AM

விருதுநகர் மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் இருந்து அக்னி நட்சத்திரம்துவங்கியது போல வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் கண்மாய், குளம் ஆகிய நீர்நிலைகளில் தண்ணீர் அளவு குறைந்து வறண்டு விட்டது. மேலும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்திலும், ஊராட்சிகளில் நன்னீர் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மூலமாக குடிநீர் வீடுகளுக்கு வழங்கப்படுகிறது.
ஆனால் கோடை காலம் என்பதால் உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் பெரும்பாலும் தற்போது பத்து நாட்களுக்கு ஒரு முறை வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இவற்றை பிளாஸ்டிக் டிரம்கள், குடங்கள், பாத்திரங்களில் சேமித்து வைத்து பயன்படுத்துகின்றனர். ஆனால் முறையாக சுத்தம் செய்கிறார்களா என்றால் இல்லை. மேலும் உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டிகளை முறையாக சுத்தம் செய்வதில்லை.
இதனால் நீண்ட நாட்கள் சேமித்து வைத்துள்ள குடிநீரில் ஏ.டி.எஸ்., கொசுக்கள்முட்டையிட்டு டெங்கு வைரசுடன் உருவாகி காய்ச்சலை பரப்புகின்றன. கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் தண்ணீரை மக்கள் யாரும் கொதிக்க வைத்து பருகுவது கிடையாது. வீடுகளில் சேமித்துள்ள தண்ணீரை நேரடியாக பருகுவதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கோடை காலத்தில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் நாட்கள் பல கடந்து விநியோகிக்கப்படுவதால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே கோடையில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் கால அளவை குறைக்க நடவடிக்கை எடுத்து நோய் பரவலை தடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி கூறியதாவது:
ஏ.டி.எஸ்., கொசு மூன்று வாரங்கள் உயிர் வாழும். இந்த மூன்று வாரங்களில் நன்னீரில் நுாற்றுக்கணக்கான முட்டையிட்டு இனப்பெருக்கும் செய்கிறது.
இதனால் தண்ணீரை சேமித்து வைக்கும் தொட்டிகள், பொருட்களை வாரம் ஒரு முறை பிளீச்சிங் பவுடர் கொண்டு நன்றாக தேய்த்து கழுவி கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும்.
பகல் நேரத்தில் குழந்தைகளை கொசு வலைக்குள் துாங்க வைக்கவேண்டும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உப்பு சேர்த்த கஞ்சி, இளநீர், ஓ.ஆர்.எஸ்., கரைசல் ஆகிய நீராகாரம் தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் வீடுகள், பள்ளிகள், பொது இடங்கள், மேல்நிலைக் குடிநீர் தொட்டிகள், சுற்றுப்புறத்தில் ஏ.டி.எஸ்., கொசுஉருவாகும் அதை துாய்மையாக வைத்துக் கொண்டால் மட்டுமே டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும். இதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.