/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கூடுதல் தொழில்பேட்டைகளை உருவாக்கி வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்
/
கூடுதல் தொழில்பேட்டைகளை உருவாக்கி வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்
கூடுதல் தொழில்பேட்டைகளை உருவாக்கி வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்
கூடுதல் தொழில்பேட்டைகளை உருவாக்கி வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்
ADDED : பிப் 23, 2024 05:33 AM

சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் நடைபெறும் பகுதிகளில் கூடுதல் தொழில் பேட்டை உருவாக்கி பல்வேறு தொழில்களை துவங்கி வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என , ம.தி.மு.க., முதன்மை செயலாளர் துரை ராமுதேவனப்பட்டியில் தெரிவித்தார்.
சாத்துார் அருகே ராமுத்தேவன்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 10 பேர் இறந்தனர்.இறந்த நபர்கள் குடும்பத்தினருக்கு ம.தி.மு.க, முதன்மைச் செயலாளர் துரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது, திடீரென்று உயிரிழப்பைச் சந்தித்துள்ள இக்குடும்பத்தினரின் வருவாய் ஆதாரத்திற்கு ஏதேனும் அரசுப் பணி வழங்க வேண்டும். ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசுகளைத் தயாரித்ததன் விளைவாகத்தான் விபத்து நிகழ்ந்துள்ளது.
பட்டாசு தயாரிப்புத் தொழிலில் உயிரிழப்புகள் நேரா வண்ணம் நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். தவிர, 9 லட்சத்து 85 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்த்து, 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் செயல்படும் தமிழக அரசு, விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் நடைபெறும் பகுதிகளில் கூடுதல் தொழில் பேட்டைகளை உருவாக்கி பல்வேறு தொழில்களைத் தொடங்கி, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். சாத்துார் எம்.எல்.ஏ., ரகுராமன், கட்சியினர் உடன் இருந்தனர்.