/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொழிற்சாலைகளில் நடக்கும் தீ விபத்துக்கள் அதிகரிப்பை தடுக்க அதிகாரிகள் ஆய்வு தேவை ஊழியர்கள் எதிர்பார்ப்பு

ADDED : மார் 17, 2024 12:12 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தொழிற்சாலைகளில் அதிக வெப்பம், மின் கசிவால் நடக்கும் தீ விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சிறு, குறு தொழிற்சாலைகள் நகர், புறநகர், ஊரகப்பகுதிகளில் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் உற்பத்தி, மின் கசிவால் நடக்கும் தீ விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
விருதுநகர் முத்துராமன்பட்டி, சிவந்திதெருவைச் சேர்ந்த கருப்பசாமி 74, சொந்தமான இனாம் ரெட்டியப்பட்டி பகுதியில் உள்ள முந்திரி எண்ணெய் தயாரிப்பு ஆலையில் ஜன. 31 காலை 6:00 மணிக்கு கொதிகலனில் அதிக வெப்பநிலை காரணமாக தீ விபத்து ஏற்பட்டு மிஷின்கள், பொருட்கள் கருகி சேதானது.
அதே போல விருதுநகர் அருகே லட்சுமி காலனியைச் சேர்ந்த ரத்தீஷ்குமார் 38, சொந்தமான கே.கே.எஸ்.என்., நகரில் உள்ள மாட்டுத்தீவனம் தயாரிப்பு ஆலையில் மார்ச் 3 காலை 9:30 மணிக்கு உற்பத்தி, சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் மிஷின்கள், கிடங்கில் இருந்த பொருட்கள் எரிந்து பாழானாது.
இந்த இரண்டு விபத்துக்கள் நடக்கும் போதும் பணியாளர்கள் யாரும் இல்லாததால் பெருமளவு உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் அமைந்துள்ள இடத்தை சுற்றியுள்ள மக்களே பெரும்பாலும் ஊழியர்களாக பணியாற்றுகின்றனர்.
எனவே புறநகர், ஊரகப்பகுதிகளில் செயல்படும் நிறுவனங்களில் அரசாங்கம் அறிவுறுத்திய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.