/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயிலில் ரூ.1.26 லட்சம் புகையிலை, கஞ்சா பறிமுதல்
/
ரயிலில் ரூ.1.26 லட்சம் புகையிலை, கஞ்சா பறிமுதல்
ADDED : டிச 29, 2025 06:21 AM
விருதுநகர்: விருதுநகரில் ரூ.1.26 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை, கஞ்சா உள்ளிட்ட பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு --- -- நாகர்கோவில் ரயிலின் பொதுப் பெட்டியில் சந்தேகப்படும்படியாக 4 பைகள் உள்ளதாக ரயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று (டிச. 28) அதிகாலை 3:45 மணிக்கு விருதுநகர் வந்த அந்த ரயிலில் சோதனையிட்ட போலீசார், பைகளை கைப்பற்றினர்.
அதில் ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள 24.5 கிலோ தடைசெய்யப்பட்ட புகை யிலை, கூல் லிப் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. இன்று விருதுநகர் உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் அவை ஒப்படைக்கப்படுகின்றன.
கஞ்சா டிச.26ல் தாம்பரம் -- - குருவாயூர் ரயிலின் பின்பக்க பொதுப் பெட்டியில் ரயில்வே போலீசார் சோதனையிட்டனர். அப்போது கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்த ரூ.ஒரு லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 11 கிலோ கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர். அதை ராமநாதபுரம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி களிடம் ஒப்படைத்தனர்.

