/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விவசாயிகள் நில உடமை விபரங்களை பதிவு செய்ய இன்றே கடைசி நாள்
/
விவசாயிகள் நில உடமை விபரங்களை பதிவு செய்ய இன்றே கடைசி நாள்
விவசாயிகள் நில உடமை விபரங்களை பதிவு செய்ய இன்றே கடைசி நாள்
விவசாயிகள் நில உடமை விபரங்களை பதிவு செய்ய இன்றே கடைசி நாள்
ADDED : ஏப் 15, 2025 05:27 AM
திருச்சுழி: திருச்சுழி வேளாண் உதவி இயக்குனர் காயத்ரி தேவி தெரிவித்துள்ளதாவது: வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடமை விபரங்கள் வேளாண் துறை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், விற்பனை துறை அலுவலர்கள், இல்லம் தேடி கல்வித் திட்ட அலுவலர்கள், பொதுச் சேவை மையங்கள், தன்னார்வலர்கள் மூலம் இலவசமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 65 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகளின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் விவசாயிகள் தங்கள் நில உடமைகளை கட்டணம் இன்றி பதிவு செய்து கொள்ளலாம்.
திருச்சுழி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஏப்ரல் 15 க்குள் தங்களுடைய ஆதார் எண் மூலம் இணைக்கப்பட்ட அலைபேசி, பட்டா நகலுடன் பொதுச் சேவை மையத்திற்கு சென்று கட்டணம் இன்றி பதிவு செய்து கொள்ளலாம்.
இனி வரும் காலங்களில் வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து விதமான மத்திய அரசின் திட்டங்கள், ஊக்கத்தொகை, பயிர் காப்பீடு உள்ளிட்டவைகள் விவசாயிகளின் அடையாள எண் பதிவுகளின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. திருச்சுழி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.