/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புத்தகத் திருவிழா இன்று கடைசி நாள்
/
புத்தகத் திருவிழா இன்று கடைசி நாள்
ADDED : அக் 07, 2024 04:42 AM
விருதுநகர்: விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்து வரும் 3வது புத்தகத்திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.
மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 3வது புத்தக திருவிழா செப். 27 ல் துவங்கி நடந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் கலை இலக்கிய அரங்கில் பல்வேறு துறைகளின் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் இருந்து அதிக அளவிலானோர் குடும்பத்துடன் வந்து புத்தகத்திருவிழாவை பார்வையிட்டு, வேண்டிய நுால்களை வாங்கிச் செல்கின்றனர்.
விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. 3வது புத்தகத்திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.

