நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: மின் மேற்பார்வை பொறியாளர் மாலதி செய்திக்குறிப்பு:
மின் நுகர்வோர், மக்களிடமிருந்து மின் கட்டணத் தொகை வேறுபாடு, மின் மீட்டர்கள் மாற்ற வேண்டியது சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றவது, குறைந்த மின் அழுத்தம் சரி செய்தல் போன்ற புகார்கள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் ஏப்.5 சனிக்கிழமை, மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்அலுவலகங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் செயற்பொறியாளர் அலுவலகங்களில் மின்நுகர்வோர்கள், மக்கள்பங்கேற்று பயன்பெறலாம், என்றார்.

