/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எடுத்து செல்லும் தொகையை அதிகப்படுத்த எதிர்பார்ப்பு: தேர்தல் கமிஷனுக்கு வணிகர்கள் கோரிக்கை
/
எடுத்து செல்லும் தொகையை அதிகப்படுத்த எதிர்பார்ப்பு: தேர்தல் கமிஷனுக்கு வணிகர்கள் கோரிக்கை
எடுத்து செல்லும் தொகையை அதிகப்படுத்த எதிர்பார்ப்பு: தேர்தல் கமிஷனுக்கு வணிகர்கள் கோரிக்கை
எடுத்து செல்லும் தொகையை அதிகப்படுத்த எதிர்பார்ப்பு: தேர்தல் கமிஷனுக்கு வணிகர்கள் கோரிக்கை
UPDATED : மார் 21, 2024 03:50 AM
ADDED : மார் 21, 2024 01:20 AM
தேர்தல் நன்னடத்தை விதிகள் மார்ச் 16 மதியம் முதல் அமலுக்கு வந்தது. மாவட்டத்தில் தலா 21 பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
சில நாட்களாக நடந்து வரும் சோதனைகளில் ரூ.15.50லட்சம் வரை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஆவணங்களின் அடிப்படையில் உரியவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும். இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக வியாபாரிகள், சிறு, குறு, நடுத்தர வணிகர்கள் கூறுகின்றனர்.
வணிகத்தில் ரொக்க பண பரிமாற்றம் தான் பெருமளவில் நடக்கிறது. வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி பணத்தை தேர்தல் பறக்கும் படையினரும் போலீசாரும் பறிமுதல் செய்வது, ஆதாரம் காண்பித்து திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்பது போன்ற கெடுபிடிகளால் மிகவும் பாதிக்கப்படுவது தொழில் வணகத்துறை. குறிப்பாக சிறு, நடுத்தர வணிகர்கள் தான் என்கின்றனர்.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது: வியாபாரிகள் பணம் பறிமுதல் செய்யப்படும் போதுவீண் அலைச்சலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். சாதாரண வணிகர்களுக்கு ஆதாரம் இருப்பது என்பது மிகவும் சிரமம். பணம் போய்விடுவது என்பது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது போன்றது.இது குறித்து தெளிவான எளிய நடைமுறையை அறிவிக்க வேண்டும்.
யதார்த்த வணிக நடைமுறையை புரிந்து கொண்டு வணிகம் பாதிக்காத வகையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்த வேண்டும். விவசாயிகளிடம் சரக்குகளை கொள்முதல் செய்வதற்கு பல ஊர்களில் உள்ள சிறு, குறு வியாபாரிகள் ரொக்க பணத்தோடுவாகனங்களில் செல்வதை தவிர்க்க முடியாது.
அத்துடன் ரொக்கப்பணத்தை வங்கிக்கு எடுத்து சென்று தான் டெபாசிட் செய்ய வேண்டும். மருத்துவம் போன்ற அவசர செலவுகளுக்கு மக்கள் எடுத்து செல்ல வேண்டி உள்ளது. எனவே வணிகர்களுக்கு பணம் கொண்டு செல்ல ரூ.2 லட்சம் வரை அனுமதி தர வேண்டும், என்றார்.

