/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வத்திராயிருப்பில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெருக்கடி
/
வத்திராயிருப்பில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெருக்கடி
வத்திராயிருப்பில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெருக்கடி
வத்திராயிருப்பில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெருக்கடி
ADDED : அக் 21, 2024 04:33 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தனித் தாலுகாவாக வத்திராயிருப்பு உருவாகிய நிலையில் நாளுக்கு நாள் குடியிருப்புகளும், வாகனப் போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. காலை, மாலை நேரங்களில் கான்சாபுரம், கூமாபட்டி, நெடுங்குளம், சேது நாராயணபுரம், வத்திராயிருப்பு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் தங்களின் கல்வி, தொழில், வேலை வாய்ப்புக்காக ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை போன்ற நகரங்களுக்கு பயணித்து வருகின்றனர்.
வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்பும், தாறுமாறாக நிறுத்தப்படும் டூவீலர்கள், ஆட்டோக்களால் பஸ்கள் எளிதில் வந்து செல்ல முடியவில்லை. அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் சிக்கும் நிலை உள்ளது.
எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றியும், தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்கு படுத்தவும் வத்திராயிருப்பு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

