/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஏழாயிரம் பண்ணையில் போக்குவரத்து நெருக்கடி: வாகன ஓட்டிகள் தவிப்பு
/
ஏழாயிரம் பண்ணையில் போக்குவரத்து நெருக்கடி: வாகன ஓட்டிகள் தவிப்பு
ஏழாயிரம் பண்ணையில் போக்குவரத்து நெருக்கடி: வாகன ஓட்டிகள் தவிப்பு
ஏழாயிரம் பண்ணையில் போக்குவரத்து நெருக்கடி: வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : ஜன 27, 2025 06:46 AM
சாத்துார்:  ஏழாயிரம் பண்ணை மெயின் பஜாரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏழாயிரம் பண்ணை மெயின் பஜார் ரோடு காய்கறி மார்க்கெட் ,வணிக வளாகங்கள் ,பராசக்தி மாரியம்மன் கோயில் சங்கரன்கோவில் கோவில்பட்டி ரோடு சந்திக்கும் பகுதியாக உள்ளது.
அதிகாலை முதல் இரவு வரை இந்த பகுதியில் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது.  மெயின்ரோட்டில் காலை , மாலை நேரங்களில் நடந்து செல்லக் கூட வழியின்றி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் விலகிச் செல்ல கூட போதுமான இடமின்றி நெருக்கடி மிகுந்து காணப்படும் மெயின் பஜாரில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு கடைகள் வேறு அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.மேலும் மெயின் பஜாரில் இருசக்கர வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்படுவதாலும் கடும் நெருக்கடி ஏற்படுகிறது.
போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ஏழாயிரம் பண்ணையில் பைபாஸ் ரோடு அமைக்க வேண்டும் என மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். .எனவே  ஏழாயிரம் பண்ணையில் பைபாஸ் ரோடு அமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

