/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடி ஒட்டங்குளத்தில் ரோட்டோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்திற்கு இடையூறு
/
நரிக்குடி ஒட்டங்குளத்தில் ரோட்டோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்திற்கு இடையூறு
நரிக்குடி ஒட்டங்குளத்தில் ரோட்டோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்திற்கு இடையூறு
நரிக்குடி ஒட்டங்குளத்தில் ரோட்டோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்திற்கு இடையூறு
ADDED : ஜூன் 23, 2025 05:47 AM
நரிக்குடி: ஒட்டங்குளம் ஊருக்குள் ரோட்டோரம் அக்கிரமிப்பால் இரு வாகனங்கள் விலகி செல்ல வழியில்லாமல் வாகன ஒட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
நரிக்குடியில் இருந்து வீரசோழனுக்கு மானாசாலை வழியாக 17 கி.மீ., தூரம் செல்ல வேண்டும். ஒட்டங்குளம் வழியாக சென்றால் 9 கி.மீ., தூரம். ஏராளமான வாகன ஓட்டிகள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு வழிப்பாதையாக இருப்பதால் இரு வாகனங்கள் விலகி செல்ல பெரிதும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒட்டங்குளம் ஊருக்குள் வீடுகளுக்கு முன் கற்களை ஊண்டி, விறகு, செடிகளை வைத்து ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால் வாகனங்கள் விலகிச் செல்ல வழி கிடையாது. இதற்காக விலகி செல்ல முடியாமல், யார் வாகனத்தை பின்னோக்கி எடுப்பது என்கிற பிரச்னை ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. கவனிப்பாரற்று வேகமாக வரும் வாகனங்களும் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது. இதற்கு பயந்து கொண்டு பெரும்பாலான வாகன ஓட்டிகள் மானாசாலை வழியாக 17 கி.மீ., தூரம் சுற்றி செல்வதால், எரிபொருள், நேரம் வீணாகிறது.
நரிக்குடியிலிருந்து புளிச்சிகுளம், ஒட்டங்குளம் வழியாக செல்வது எளிதானதாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் அறியாமையில் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஊரைக் கடக்க படாதபாடு படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, ஊருக்குள் ரோட்டோரம் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்திற்கு இடையூறு இன்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.