/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டில் நிறுத்தப்படும் டூவீலர்களால் போக்குவரத்திற்கு இடையூறு
/
ரோட்டில் நிறுத்தப்படும் டூவீலர்களால் போக்குவரத்திற்கு இடையூறு
ரோட்டில் நிறுத்தப்படும் டூவீலர்களால் போக்குவரத்திற்கு இடையூறு
ரோட்டில் நிறுத்தப்படும் டூவீலர்களால் போக்குவரத்திற்கு இடையூறு
ADDED : பிப் 19, 2024 05:37 AM

சிவகாசி : மாவட்டத்தில் நகர், கிராமப்பகுதிகளில் ரோட்டில் நிறுத்தப்படும் டூவீலர்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்திற்கும் வழி வகுக்கிறது.
மாவட்டத்தில் நகர், கிராம பகுதிகளில் அதிக அளவில் டூவீலர்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். அவசர தேவைக்கு சீக்கிரமாக எளிதில் சென்று வருவதற்கு டூவீலர்கள் பயன்படுகின்றது.
பொதுவாகவே நகரங்களில் குறிப்பாக பஜார் பகுதிகளில் கடைகளின் ஆக்கிரமிப்புகளால் ரோடு சுருங்கிவிட்டது.
ஒவ்வொரு கடைக்காரர்களும் போட்டி போட்டுக்கொண்டு ரோட்டினை ஆக்கிரமிப்பு செய்கின்றனர். இதனால் பஜாருக்கு டூவீலர்களில் வருபவர்கள் தங்களது வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்தி விடுகின்றனர்.
சில இடங்களில் ரோட்டின் இருபுறத்திலும் டூவீலர்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் விபத்தும் ஏற்படுகின்றது. சிவகாசியில் பஸ் ஸ்டாண்ட் எதிரே, ரத வீதிகள், காந்தி ரோடு, திருத்தங்கல் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோட்டிலேயே டூவீலர்கள் நிறுத்தப்படுகிறது.
பொதுவாக ஒரு நிறுவனமோ, வணிக வளாகம் கட்டப் படுகையில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கி பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும்.
ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை கடைபிடிப்பதில்லை. இதனால் அங்கு வருகின்ற டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் ரோட்டிலேயே நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.
ரோடும் குறுகிய நிலையில், வாகனங்களையும் அங்கேயே நிறுத்துவதால் விபத்து ஏற்படுகின்றது.
புதிதாக நிறுவனமோ, வணிக வளாக கட்டடமோ கட்டுகையில் அங்கு வாகனத்தை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி உள்ளதா என உள்ளாட்சி நிர்வாகங்கள் ஆராய்ந்து அனுமதி வழங்க வேண்டும்.

