/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி பஸ் ஸ்டாண்டில் பஸ்களால் போக்குவரத்து நெருக்கடி
/
காரியாபட்டி பஸ் ஸ்டாண்டில் பஸ்களால் போக்குவரத்து நெருக்கடி
காரியாபட்டி பஸ் ஸ்டாண்டில் பஸ்களால் போக்குவரத்து நெருக்கடி
காரியாபட்டி பஸ் ஸ்டாண்டில் பஸ்களால் போக்குவரத்து நெருக்கடி
ADDED : பிப் 28, 2024 06:20 AM
காரியாபட்டி, : காரியாபட்டி பஸ் ஸ்டாண்டில் மதுரை, அருப்புக்கோட்டை செல்லும் பஸ்களை எதிர் எதிரே நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மற்ற வாகனங்கள் பஸ் ஸ்டாண்ட்டை கடந்து செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாவதால் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளதால், அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த வழித்தடத்தில் எப்போதும் வாகன நெருக்கடிகள் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் காரியாபட்டிக்கு பல்வேறு ஊர்களிலிருந்து அதிக அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
போதிய இடவசதி இல்லாமல், பஸ்களை மெயின் ரோட்டில் நிறுத்துகின்றனர். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் மதுரை, அருப்புக்கோட்டை செல்லும் பஸ்களை பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே ஒரே இடத்தில் எதிர் எதிரே நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடியால் மற்ற வாகனங்கள் பஸ் ஸ்டாண்டை கடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. ஆத்திர அவசரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை.
இப்பிரச்னைக்கு தீர்வு காண ரூ. பல லட்சம் செலவில் நிழற்குடை கட்டப்பட்டது. அருப்புக்கோட்டை செல்லும் பஸ்களை நிழற்குடை அருகே நிறுத்துவது என்றும், மதுரை செல்லும் பஸ்களை ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நிறுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
அதை செயல்படுத்த அதிகாரிகள் முனைப்பு காட்டவில்லை. தற்போது நிழற்குடையில் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்தும், குடோன்களாகவும், வழிப்போக்கர்கள் தங்குமிடமாகவும் பயன்படுத்துகின்றனர்.
விசேஷ நாட்களில் காரியாபட்டியில் டூவீலர்கள் மற்ற வாகனங்களின் பயன்பாடு அதிக அளவில் இருக்கும். ரோட்டோரங்களில் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
இதனை தடுக்கும் பொருட்டு நிழற்குடை அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அருப்புக்கோட்டை செல்லும் பஸ்களை அங்கே நிறுத்தவும், அதேபோல் மதுரை செல்லும் பஸ்களை ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நின்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்தால் மற்ற வாகனங்கள் பஸ் ஸ்டாண்டை கடப்பதில் எந்த சிரமமும் இருக்காது.
ஆக்கிரமிப்புகளை அகற்றி எதிரெதிரே நிற்கும் பஸ்களை மாற்று இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

