/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையத்தில் செயல்படாத சிக்னல்: சிக்கலில் போக்குவரத்து
/
ராஜபாளையத்தில் செயல்படாத சிக்னல்: சிக்கலில் போக்குவரத்து
ராஜபாளையத்தில் செயல்படாத சிக்னல்: சிக்கலில் போக்குவரத்து
ராஜபாளையத்தில் செயல்படாத சிக்னல்: சிக்கலில் போக்குவரத்து
ADDED : ஜன 24, 2025 04:10 AM
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் செயல்படாத சிக்னல்களால் போக்குவரத்து சிக்கல்களுக்கு தீர்வு இல்லாத நிலை இருந்து வருகிறது.
ராஜபாளையத்தில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால்  நகரில் அடிக்கடி போக்குவரத்து  நெருக்கடி ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.  இவற்றை தவிர்க்க போக்குவரத்து போலீசார் ஈடுபடுவதுடன் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட், பழைய பஸ் ஸ்டாண்ட், ரவுண்டானா, கலை மன்றம்,  சங்கரன்கோவில் முக்கு பகுதிகளில் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாகனங்களை கட்டுப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்க வேண்டிய சிக்னல்கள் தற்போது செயல்படாமல் உள்ளன. இதனால் போலீசார் இல்லாத நேரங்களில் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி சென்று ஆம்புலன்சுக்கும் வழி விட முடியாமல் நெரிசல் ஏற்படுவதுடன் விபத்தில் சிக்குகின்றன. இதனால் காலை, மாலை நேரத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள்உள்ளிட்டோர் நெரிசலில் தவிக்கின்றனர். சிக்னல்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

