/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெருக்கடி
/
ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெருக்கடி
ADDED : ஜூலை 26, 2011 09:18 PM
காரியாபட்டி:காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் இதை அகற்ற அதிகாரிகள் முன் வர வேண்டும் .காரியாபட்டி சுற்று கிராம மக்கள் அனைத்து தேவைகளுக்கும் காரியாபட்டிதான் வரவேண்டும்.
இதனால் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். வெளியூர் செல்பவர்கள் ரோட்டின் இருபுறமும் நிற்பர். மதுரை மார்க்கமாக செல்லும் பஸ், அருப்புக்கோட்டை மார்க்கமாக செல்லும் பஸ்சும் எதிர் எதிரே நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இது போன்ற சூழ்நிலையை தவிர்க்க பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பஸ் நிறுத்தத்தை மாற்றி அமைத்தால் இதன் பிரச்னைக்கு முடிவு கட்டலாம். இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், ஒன்றிய அலுவலக ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பை மட்டும் பேரூராட்சி நிர்வாகம் எடுத்த நிலையில், மற்ற இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு, நெடுஞ்சாலைத்துறை இடம் என்பதால் எடுக்க வில்லை. பேரூராட்சி நிர்வாகத்துடன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுத்து, நிரந்தர தீர்வு காண வேண்டும்.