/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி தபால் நிலையத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு நிறுத்தம் பயணிகள் அவதி
/
சிவகாசி தபால் நிலையத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு நிறுத்தம் பயணிகள் அவதி
சிவகாசி தபால் நிலையத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு நிறுத்தம் பயணிகள் அவதி
சிவகாசி தபால் நிலையத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு நிறுத்தம் பயணிகள் அவதி
ADDED : டிச 24, 2025 05:52 AM
சிவகாசி: சிவகாசி தபால் நிலையத்தில் ரயில் பயண டிக்கெட் முன்பதிவு நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சிவகாசி ரயில் நிலையம் வழியாக சென்னை - செங்கோட்டை, சென்னை - கொல்லம், மதுரை - குருவாயூர், செங்கோட்டை - மயிலாடுதுரை, மதுரை - குருவாயூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி சேவையாகவும், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி, தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரம் 3 நாட்களும், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம், தாம்பரம் - வடக்கு திருவனந்தபுரம் இடையே வாரம் ஒருமுறையும் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சிவகாசி ரயில் நிலையத்திற்கு தினசரி சராசரியாக 3 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். 2024- - 2025 நிதியாண்டில் சிவகாசி ரயில் நிலையம் ரூ.7.72 கோடி வருவாய் ஈட்டி உள்ளது.
மதுரை ரயில்வே கோட்டத்தில் தபால் நிலையத்தில் ரயில் பயண டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி முதன் முறையாக சிவகாசி தபால் நிலையத்தில் 2018ல் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காக நிலையத்தில் தனி கவுண்டர் திறக்கப்பட்டு, முன்பதிவு பயண டிக்கெட், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வந்தது. சிவகாசி ரயில் நிலையத்தில் காலை 8:00 முதல் 11:00 மணி வரையிலும் மற்றும் மாலை 4:00 முதல் 7:00 மணி வரை மட்டுமே முன்பதிவு டிக்கெட் வழங்கப்படுகிறது. இதனால் பயணிகள் வேலை நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் தபால் நிலையத்தில் சென்று ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் ஒரு மாதமாக சிவகாசி தபால் நிலையத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ரயில்வே நிர்வாகம் மற்றும் தபால் துறை இணைந்து சிவகாசி தபால் நிலையத்தில் பயண டிக்கெட் முன்பதிவு சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தலைமை தபால் அதிகாரி சண்முகராஜன் கூறுகையில், தினமும் குறைந்தது 10 டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். ஆனால் இங்கு 6 அல்லது 7 மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது. எனவே முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

