நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியின் நுண்ணுயிரியல் துறையும், கிண்டி பரீக்ஷன் எப்.எஸ்.எஸ்., தனியார் நிறுவனமும் இணைந்து மாணவிகளுக்கான பயிற்சி வகுப்பை நடத்தியது.
பரீக்ஷன் மூத்த உதவியாளர் கார்த்தி, உணவு பாதுகாப்பு பயிற்சி, தரம் ஆராய்ந்து சான்று வழங்குதல் என்ற தலைப்பில் பேசினார். இதில் உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள், உணவில் கலப்படத்தை தவிர்க்கும் முறைகள், நுண்ணுயிரிகளால் உணவுப் பொருட்களை மாசுபடாமல் எவ்வாறு கையாள்வது, உணவு பொருட்களில் உள்ள கலப்படங்களை எவ்வாறு பகுப்பாய்வு செய்வது போன்றவற்றைக் கூறினார்.