ADDED : டிச 16, 2025 06:19 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: தேசியபுலிகள் ஆணையத்தின் சார்பில் அகில இந்திய அளவில் புலிகள் மதிப்பீடு 2026 துவங்கவுள்ளதை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் வன விரிவாக்க மையத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரக அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.
துணை இயக்குனர் முருகன் துவக்கி வைத்தார். இதில் புலிகள் கணக்கெடுப்பு நடைமுறை குறித்தும், கேமராக்கள் பொருத்துதல், மென்பொருள் செயல்களில் தரவுகளை பதிவேற்றம் திறன்கள் குறித்தும், பதிவு செய்யப்பட வேண்டிய பிற விபரங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
பயிற்சி வகுப்பில் வனச்சரகர்கள், வனக்காவலர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றனர்.
ஜன.8 முதல் நவீன டிஜிட்டல் கேமராக்கள் பொருத்தப்பட்டு, பின்னர் 40 நாட்கள் வரை அதில் பதிவாகும் படங்களை பதிவிறக்கம் செய்து, அதனடிப்படையில் டிஜிட்டல் முறையில் துல்லியமாக புலிகள் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
