நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான ஜனவரி 3, 4 ஆகிய இரண்டு நாள் இன்டர்நெட் ஆப் திங்ஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி பட்டறை நடந்தது.
துவக்க விழாவில் இந்திய அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் திருநெல்வேலி கிளை மேம்பாட்டு வசதி அலுவலக உதவி இயக்குனர் சிமியோன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி பட்டறையை துவக்கி வைத்து பேசினார்.
திருநெல்வேலி தலால் ஜியோஸ்பேசியல் அனலிட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் விக்னேஷ் கந்தசாமி ஐஓடியின் எதிர் காலப் போக்குகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் என்ற தலைப்பில் பேசினார். பேராசிரியர்கள் கல்லுாரி நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.