நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் வேதியியல் துறை சார்பில் இந்திய அறிவியல் அகாடமி நிதி உதவியுடன் வேதியியல் அறிவியலில் நவீன முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி பட்டறை கல்லுாரி முதல்வர் சாரதி தலைமையில் நடந்தது.
துறைத் தலைவர் கருணாகரன் வரவேற்றார். அணுசக்தி துறை ராஜா ரமணா விருது பெற்ற முன்னாள் பேராசிரியர் ராமராஜ் பயிற்சி பட்டறையின் நோக்கம் குறித்து பேசினார்.
பெங்களூரு இந்திய அறிவியல் கழக கனிம வேதியியல் துறை பேராசிரியர் நடராஜன், வேதியியல் துறை பேராசிரியர் ஜாகிர்தார், ரூர்க்கி இந்திய அறிவியல் கழக வேதியியல் துறை பேராசிரியர் சங்கர், சென்னை இந்திய அறிவியல் கழக வேதியியல் துறை பேராசிரியர் அன்பரசன் ஆகியோர் பேசினர். ஒங்கிணைப்பாளர் ராமன் நன்றி கூறினார்.

