நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியின் மின்னணுவியல் தொடர்பியல் துறை, ஏ.டி.எல் - ஏ.ஐ.சி.டி.இ, வாணி சார்பில் குவாண்டம் தகவல் தொடர்பு பாதுகாப்பான நெட்வொர்க்குகளின் எதிர்காலத்தை உருவாக்குதல் என்ற தலைப்பில் கல்லுாரி பேராசிரியர்களுக்கான 3 நாள் பயிற்சி பட்டறை நடந்தது.
தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். மின்னணுவியல் துறைத்தலைவர் வளர்மதி வரவேற்றார். முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி பயிற்சி நோக்கம் குறித்து விளக்கினர்.
பேராசிரியர்கள் மல்லிகா, பத்ரி, பெங்களூர் டெல் டெக்னாலஜிஸ் ராஜேஷ், மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரி பேராசிரியர் காமராஜ் பேசினர். பேராசிரியர்களுக்கு பயிற்சி மற்றும் கற்றல் அகாடமி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

