நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி முதுநிலை, வேதியல் ஆராய்ச்சி துறை சார்பில் மாணவிகளுக்கு பேராசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது குறித்து இரு நாட்கள் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.
கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். வேதியியல் துறை தலைவர் முருக லட்சுமி வரவேற்றார். வேதியியல் துறை பேராசிரியர் குமார் ராஜா, இணை பேராசிரியர் கணேஷ் குமார், , உதவி பேராசிரியர் அன்டோ ஆரோக்கியராஜ், பேராசிரியர் தங்ககிரி பயிற்சி அளித்தனர். வேதியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாதிரி தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வேதியியல் துறை உதவி பேராசிரியர்கள் விண்ணரசி, பொற்கொடி செய்தனர்.

