ADDED : ஜூன் 05, 2026 01:19 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலின் போது தென் மாவட்டங்களில் பணியாற்றிய டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாதமான நிலையில், பிற அரசு துறைகளில் மாற்றம் செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் மீண்டும் தாங்கள் விரும்பும் நகரங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் காவல்துறையில் மட்டும் மே 31 வரை டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், பணியிட மாற்றம் செய்யப்படாமல் இருந்தனர்.
இதனால் தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என போலீஸ் குடும்பத்தினர் அச்சமடைந்தனர்.
இது குறித்து மே31ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ஜூன் 2ல் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பணியாற்றிய 35 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதனால் போலீஸ் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
