sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 குப்பை தொட்டிகளாக மாறிவரும் டிரான்ஸ்பார்மர்கள்

/

 குப்பை தொட்டிகளாக மாறிவரும் டிரான்ஸ்பார்மர்கள்

 குப்பை தொட்டிகளாக மாறிவரும் டிரான்ஸ்பார்மர்கள்

 குப்பை தொட்டிகளாக மாறிவரும் டிரான்ஸ்பார்மர்கள்


ADDED : மார் 09, 2026 07:08 AM

Google News

ADDED : மார் 09, 2026 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசியில் குப்பை தொட்டிகளாக மாறிவரும் டிரான்ஸ்பார்மர்கள் அருகே தீவைப்பதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.

சிவகாசி மாநகராட்சியில் குடியிருப்பு பகுதிகள், போக்குவரத்து நிறைந்த ரோட்டோரங்களில் ஏராளமான டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. திறந்த வெளியில் டிரான்ஸ்பார்மர் இருந்தால் அதன் அருகே விபரீதம் அறியாமல் மக்கள் சென்றால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் தெரியாமல் உரசினால் விபத்து அபாயம் ஏற்படும். இதனால் அனைத்து டிரான்ஸ்பார்மர்களைச் சுற்றிலும் பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதனை மக்கள் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பு தடுப்புகள் வெளியிலிருந்து பார்ப்பதற்கு குப்பை தொட்டி போல் காட்சியளிப்பதால் மக்கள், கடை உரிமையாளர்கள் தங்களது குப்பைகளை அதற்குள் போட்டு விடுகின்றனர். இதனை கண்டறிந்து அகற்றுவதற்கும் வழி இல்லை. இதில் யாராவது தெரியாமல் தீ வைத்தால் டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்து பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடந்த காலங்களில் இது போல் டிரான்ஸ்பார்மர் அருகே கொட்டப்பட்ட குப்பைகளில் தீ வைத்து அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. எனவே டிரான்ஸ்பார்மர் அருகே குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us