ADDED : ஜூலை 23, 2025 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிபடி அனைவருக்கும் பழைய பென்சன் வழங்குதல், உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்குதல், ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு அமல்படுத்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சி.ஐ.டி.யு., மண்டல பொதுச் செயலாளர் வெள்ளைத்துரை தலைமையில் தர்ணா போராட்டம் நடந்தது.
இதில் சி.ஐ.டி.யு., மாநில உதவி தலைவர் பிச்சை, மாவட்ட தலைவர் மகாலட்சுமி, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மண்டல பொது செயலாளர் போஸ், மாவட்ட தலைவர் வேலுச்சாமி, அனைத்து துறை ஓய்வூதியர் அமைப்பு மாவட்டச் செயலாளர் குருசாமி, மத்திய சங்க தலைவர் திருப்பதி உள்பட பலர் பங்கேற்றனர்.