/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவமனை முன் மின் கம்பியில் விழுந்த மரக்கிளை
/
அரசு மருத்துவமனை முன் மின் கம்பியில் விழுந்த மரக்கிளை
அரசு மருத்துவமனை முன் மின் கம்பியில் விழுந்த மரக்கிளை
அரசு மருத்துவமனை முன் மின் கம்பியில் விழுந்த மரக்கிளை
ADDED : நவ 15, 2024 06:17 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் அரசு மருத்துவமனை நுழைவாயில் அருகே இருந்த மரக்கிளை முறிந்து மின் கம்பியில் விழுந்தது. நோயாளிகள் யாரும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.
ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை முன்பு பெரிய அரசமரம் உள்ளது. நேற்று மாலை லேசான காற்றோடு பெய்த சாரல் மழையால் மரத்தின் பெரிய கிளை நுழைவாயில் அருகே உள்ள மின்கம்பியில் முறிந்து விழுந்து வாசலை அடைத்தது.
உயர் அழுத்த மின்கம்பியில் சாய்ந்ததால் மின் வயர்கள் தொய்வு ஏற்பட்டது. மின் ஊழியர்கள் மரக்கிளையை வெட்டி அகற்றி மின் வயரை சரி செய்து மாற்றி அமைத்தனர். இதனால் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
சாரல் மழை விழுந்ததால் அப்பகுதியில் எப்போதும் நிற்கும் பார்வையாளர்கள் நோயாளிகள் யாரும் இல்லை. இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது.