/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,யில் மரங்கள் நிறைந்த பசுமை தெருக்கள் முன்னோர்களால் கிடைத்த பயன்
/
ஸ்ரீவி.,யில் மரங்கள் நிறைந்த பசுமை தெருக்கள் முன்னோர்களால் கிடைத்த பயன்
ஸ்ரீவி.,யில் மரங்கள் நிறைந்த பசுமை தெருக்கள் முன்னோர்களால் கிடைத்த பயன்
ஸ்ரீவி.,யில் மரங்கள் நிறைந்த பசுமை தெருக்கள் முன்னோர்களால் கிடைத்த பயன்
ADDED : பிப் 19, 2024 05:43 AM

ஸ்ரீவில்லிபுத்துார் நகரின் பல்வேறு தெருக்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் நட்டு வளர்த்த மரக்கன்றுகள் எல்லாம் இன்றைய தலைமுறையினர் பயனடையும் வகையில் வளர்ந்து மரங்கள் நிறைந்த பசுமை தெருக்களாக உருவாகியுள்ளது.
மரங்கள் நிழல் தருவது மட்டுமில்லாமல் மனித சமுதாயம் வாழ்வதற்குரிய சுத்தமான காற்றையும் தருகிறது. இயற்கையின் கொடையால் ரோட்டில் இரு புறமும் வளர்ந்துள்ள மரங்களால் வெயில் தாக்கத்திலிருந்து தப்பித்து வருகிறோம்.
தெருக்களில் வளர்ந்துள்ள மரங்களால் மாலை நேரங்களில் இயற்கையான காற்று கிடைக்கிறது.
மனித நலன் காக்க இயற்கையாக வளர்ந்துள்ள மரங்களை இறைவனாக நினைத்து நாம் வழிபாடு செய்து வருகிறோம். அதனால் தான் ஒவ்வொரு கோயிலிலும் தல விருட்சமாக மரங்கள் உள்ளது.
மரங்கள் நிறைந்த மலைக் கோயில்கள் எல்லாம் மனித சமுதாய நலன் காப்பவையாக விளங்குகிறது. மலைப்பகுதியில் வாரம் ஒரு முறை பயணித்தாலேயே நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இவ்வாறு மனித சமுதாய நலன் காக்கும் மரங்கள் இன்று ஸ்ரீவில்லிபுத்துார் நகரின் பல்வேறு தெருக்களில் அடர்ந்து வளர்ந்து பசுமை தெருக்களாக காணப்படுகிறது.
அந்த வகையில் நகரில் கூனங்குளம் தெரு, மாரியம்மன் கோவில் மேற்கு கிழக்கு தெருக்கள், மாயாண்டிப்பட்டி மடத்துப்பட்டி தெரு, நகராட்சி அலுவலகமுள்ள கீழ்த்தெரு உட்பட பல தெருக்களில் மிகவும் அதிகளவில் மரங்கள் இருப்பதால் அப்பகுதி பசுமை தெருக்களாக காணப்படுகிறது.
இத்தகைய சூழலை நகரின் 33 வார்டுகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் ஏற்படுத்த இன்றைய இளைய தலைமுறையினர் பலர் மரங்கள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை ரோட்டில் சேவா பாரதி அமைப்பினர் வைத்த மரக்கன்றுகள் எல்லாம் இன்று மரங்களாக வளர்ந்துள்ளன. திருப்பாற்கடல் உட்பட பல்வேறு பகுதிகளில் எவ்வித விளம்பரம் இன்றி பல தன்னார்வலர்கள் மரக்கன்றுகள் நட்டு, தினமும் தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகின்றனர்.
இதனை ஒவ்வொரு தெருவிலும் உள்ள இளைஞர்கள் கடைப்பிடித்தால் நகரின் அனைத்து பகுதிகளிலும் மரங்கள் நிறைந்த பசுமை தெருக்களை உருவாகும் என்பதில் ஐயமில்லை.
மரங்கள் வளர்ப்பது மிகவும் அவசியம்
-மாரிச்சாமி, சேவா பாரதி நிர்வாகி: நகரின் ஒவ்வொரு தெருவிலும் நூற்றாண்டுகளுக்கு முன்பு வைத்த மரங்கள் எல்லாம் இன்று நிழல் தரும் மரங்களாக உள்ளது. இது நமது முன்னோர்கள் நமக்கு அளித்த அளப்பரிய சொத்தாகும். அதனை பின்பற்றி நாமும் அடுத்த தலைமுறையினர்
நலன் காக்க தெருக்கள் தோறும் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது அவசியம்.
அந்த வகையில் சேவா பாரதி அமைப்பின் சார்பில் திருவண்ணாமலை ரோட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு வைத்த மரக்கன்றுகள் இன்று மரங்களாக வளர்ந்துள்ளது. இது மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது.
சவாலாகும் மக்கா குப்பைகள்
-சந்திரன், எக்ஸ்னோரா நிர்வாகி: நகரில் தினமும் 23 டன் கழிவுகள் சேருகிறது. இதில் மக்காத குப்பைகள் 3 டன் அளவிற்கு வருகிறது.
இத்தகைய மக்காத மாசுக்கள் எதிர்கால மனித சமுதாயத்திற்கு சவாலான பிரச்சனையாகும். இதில் பலசரக்கு கடைகள், ஹோட்டல்கள், டீக்கடைகளில் சேரும் பாலித்தீன் கழிவுகள், பிளாஸ்டிக் கேரி பைகள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதை தவிர்ப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும்.
முன் காலத்தில் இருந்தது போல் மஞ்சப்பையையும், உணவுப் பொருட்கள் பார்சலில் வாங்க பாத்திரங்களையும் பயன்படுத்த தொடங்கினால் நகரில் பாதியளவு குப்பைகளை தவிர்க்க முடியும்.
மரங்கள் வளர்ப்பது மிகவும் அவசியம்
-மாரிச்சாமி, சேவா பாரதி நிர்வாகி: நகரின் ஒவ்வொரு தெருவிலும் நூற்றாண்டுகளுக்கு முன்பு வைத்த மரங்கள் எல்லாம் இன்று நிழல் தரும் மரங்களாக உள்ளது. இது நமது முன்னோர்கள் நமக்கு அளித்த அளப்பரிய சொத்தாகும். அதனை பின்பற்றி நாமும் அடுத்த தலைமுறையினர்
நலன் காக்க தெருக்கள் தோறும் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது அவசியம். அந்த வகையில் சேவா பாரதி அமைப்பின் சார்பில் திருவண்ணாமலை ரோட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு வைத்த மரக்கன்றுகள் இன்று மரங்களாக வளர்ந்துள்ளது. இது மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது.
சவாலாகும் மக்கா குப்பைகள்
-சந்திரன், எக்ஸ்னோரா நிர்வாகி: நகரில் தினமும் 23 டன் கழிவுகள் சேருகிறது. இதில் மக்காத குப்பைகள் 3 டன் அளவிற்கு வருகிறது. இத்தகைய மக்காத மாசுக்கள் எதிர்கால மனித சமுதாயத்திற்கு சவாலான பிரச்சனையாகும். இதில் பலசரக்கு கடைகள், ஹோட்டல்கள், டீக்கடைகளில் சேரும் பாலித்தீன் கழிவுகள், பிளாஸ்டிக் கேரி பைகள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதை தவிர்ப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். முன் காலத்தில் இருந்தது போல் மஞ்சப்பையையும், உணவுப் பொருட்கள் பார்சலில் வாங்க பாத்திரங்களையும் பயன்படுத்த தொடங்கினால் நகரில் பாதியளவு குப்பைகளை தவிர்க்க முடியும்.

