ADDED : ஆக 14, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை, ஆக. 15 -
அருப்புக்கோட்டை கோர்ட் வளாகத்தில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
கூடுதல் மாவட்ட நீதிபதி வசந்தகுமார் தலைமை வகித்தார். சட்டப்பணிகள் குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி சதீஷ், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆனந்த வள்ளி, குற்றவியல் நீதிபதி செல்வி ஜெயப்பிரதா ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். வக்கீல்கள் சங்கத் தலைவர் முத்துராஜன், செயலாளர் ஜோபு ராம்குமார், துணைத் தலைவர் பாரதிசேது, மூத்த வக்கீல்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். 30 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
___
படம் உள்ளது
