ADDED : நவ 04, 2026 11:48 AM

அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசி அருகே ஆனையூர் அய்யம்பட்டி கண்மாயில் சட்டசபை தொகுதி வீத லீடர்ஸ் அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக 3 ஏக்கர் பரப்பளவில் 500 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
பென்டகன் பாண்டுரங்கன் தலைமை வகித்து மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் பாலசுப்பிரமணியம், ஓய்வு எஸ்.ஐ., முருகேசன், கார்த்தி வேலன் மணிராஜ், ராஜேஸ்வரன், வினோத், வழக்கறிஞர் முனீஸ் பாண்டி கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ரோகித் செய்திருந்தார்.
