/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருச்சுழியில் பலத்த காற்றுடன் மழை முறிந்து விழுந்த மரங்கள்
/
திருச்சுழியில் பலத்த காற்றுடன் மழை முறிந்து விழுந்த மரங்கள்
திருச்சுழியில் பலத்த காற்றுடன் மழை முறிந்து விழுந்த மரங்கள்
திருச்சுழியில் பலத்த காற்றுடன் மழை முறிந்து விழுந்த மரங்கள்
ADDED : மே 17, 2025 12:46 AM
திருச்சுழி: திருச்சுழி அருப்புக்கோட்டை பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்ததில் திருச்சுழியின் பல பகுதிகளில் மரங்கள் ஒடிந்து விழுந்தன.
அருப்புக்கோட்டை திருச்சுழியில் 3 நாட்களாக கோடை வெயில் வாட்டிய நிலையில், நேற்று மாலை 6:00 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்தது.
அருப்புக்கோட்டையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததில் தெருக்களில் வாறு கால்கள் நிறைந்து ஓடியது. இதேபோன்று திருச்சுழியில் பெய்த மழையில், பலத்த காற்றிற்கு அரசு மருத்துவமனையில் மரம் ஒடிந்து விழுந்தது.
அருப்புக்கோட்டை - திருச்சுழி ரோடு பகுதியில் ரேஷன் கடை அருகில் ஒரு மரம் விழுந்தது.
பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள மரம் மின் கம்பி மீது விழுந்ததில், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
இதனால் 2 மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது. திருச்சுழி - நரிக்குடி ரோட்டில் மரத்தின் கிளைகள் ஆங்காங்கு ஒடிந்து விழுந்தன.