/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பில் மலையேற்ற கட்டணம் குறைப்பு
/
ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பில் மலையேற்ற கட்டணம் குறைப்பு
ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பில் மலையேற்ற கட்டணம் குறைப்பு
ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பில் மலையேற்ற கட்டணம் குறைப்பு
ADDED : மே 23, 2025 11:18 PM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பில் மலையேற்ற கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத் துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்தார்.
அவரது செய்தி குறிப்பு:
ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட செண்பகத்தோப்பு முதல் வ.புதுப்பட்டி வரை 9 கிலோமீட்டர் தூரமுள்ள மலையேற்ற திட்டம் வனத் தீ தடுப்பு நடவடிக்கை, மலை ஏறுபவர்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக கடந்த 2 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்சமயம் மே மாதம் முதல் வாரத்தில் இருந்து மலையேற்றம் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்காக இதுவரை ஒரு நபருக்கு ரூ. 2500 கட்டணம் பெறப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ. 1260 ஆகவும், 6 முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு ரூ.818 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதில் மதிய உணவு மற்றும் பழச்சாறு ஆகியவை அடங்கும்.
எனவே, இதற்கான இணையதளம் மூலம் முன்பதிவு செய்து மலையேற்றம் செல்ல பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.