UPDATED : மே 01, 2026 06:47 PM
ADDED : மே 01, 2026 06:40 PM
விருதுநகர்: விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் மார்ச் 19ல் நடந்த வெடி விபத்தில் 27 பேர் இறந்துள்ளனர் இவர்களுக்கு அஞ்சலிக் கூட்டம் தென் மாவட்ட விவசாய சங்கம் சார்பில் விருதுநகர் ஆர்.ஆர்.நகரில் நடந்தது.
மாவட்ட துணை தலைவர் ராமமூர்த்தி, வச்சகாரப்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் காளிமுத்து தலைமையில் அஞ்சலி செலுத்தினர். மாநில பொதுச் செயலாளர் அர்ஜுனன், மாவட்ட தலைவர் ராம் பாண்டியன், செயலாளர் கோபாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்தனர் தெரிவித்து பேசினர். பட்டாசு ஆலை உயிரிழப்புகளை மாவட்ட நிர்வாகம் தனி கவனம் எடுத்து தடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மாவட்ட முழுவதும் உள்ள விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள், சமூக ஆர்வலர்களை அணி திரட்டி பெரும் இயக்கங்களை நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
