ADDED : மார் 02, 2026 06:21 AM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தென்மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் ஆலன்ராஜ் முன்னிலை வகித்தார். பொரு ளாளர் முரளி மோகன், சங்கர் வரவேற்றனர்.
இதில் பொறுப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் ஓட்டுகளை ஒருங்கிணைப்பது, கட்சி யின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மாரிமுத்து, சந்தன ஜோதி உள்ளிட்ட நகர, ஒன்றிய பேரூராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
அணி அமைப்பாளர் நடுக்காட்டான் நன்றி கூறினார்.
