ADDED : ஏப் 05, 2025 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் வக்ப் சட்ட மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். இஸ்லாமியர்கள், கட்சியினர் பங்கேற்றனர்.
*விருதுநகர் வடமேற்கு மாவட்டம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்துார் தெற்கு ரத வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
* மத்திய மாவட்டம் சார்பில் சாத்துாரில் மாவட்ட செயலாளர் சின்னப்பர், தென் மேற்கு மாவட்டம் ராஜபாளையத்தில் மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்வரி தலைமையில் நடந்தது.