/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வழித்தடங்களை மறுக்கும் மினி பஸ்களால் சிரமம்! புதிதாக துவங்கியும் பயனில்லாததால் தவிப்பு
/
வழித்தடங்களை மறுக்கும் மினி பஸ்களால் சிரமம்! புதிதாக துவங்கியும் பயனில்லாததால் தவிப்பு
வழித்தடங்களை மறுக்கும் மினி பஸ்களால் சிரமம்! புதிதாக துவங்கியும் பயனில்லாததால் தவிப்பு
வழித்தடங்களை மறுக்கும் மினி பஸ்களால் சிரமம்! புதிதாக துவங்கியும் பயனில்லாததால் தவிப்பு
ADDED : டிச 19, 2025 05:51 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக அறிவித்த வழித்தடங்களில் இயக்க மறுக்கும் மினி பஸ்களால் பயணிகள் பரிதவிப்பில் உள்ளனர்.
தற்போது புதிதாக துவங்கப்பட்ட 16 மினி பஸ்களை சேர்த்து 50க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் மாவட்டம் முழுவதும் இயங்குகிறது. இவற்றில் பல வழித்தடங்களில் செல்லாமல் மாற்று வழிகளை பயன்படுத்துகின்றன. இதை கண்காணிக்க வேண்டியது வட்டார போக்குவரத்து துறையினர்.
ஆனால் சுத்தமாக கண்டுக் கொள்வதே இல்லை. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஒரு நாள் ஒரு வழித்தடத்தை பயன்படுத்தி விட்டு, மற்றொரு நாள் இன்னொரு வழித்தடத்தை பயன்படுத்தி குழப்பு கின்றனர்.
ஒரு நாள் ஒரு வழித்தடத்தில் காத்திருந்தவர்கள் பஸ்கள் வராமல் ஏமாறுகின்றனர். மேலும் மினி பஸ்களை கணக்கில் வைத்து அரசு பஸ்களும் அந்த வழித்தடங்களில் செல்லாததால் அப்பகுதி மக்களே பாதிக்கப்படுகின்றனர். குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல நிறைய வழித்தடங்களை அமைத்து கொடுத்தாலும் டீசலை காட்டி குறுகிய வழித்தடங்களில் பயணிக்கின்றனர். இதனால் நகர்ப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இப்போது புதிதாக அறிவித்துள்ள 16 மினி பஸ்களில் பழைய பஸ்களும் உள்ளன. பெருநகரங்களில் மினி மின்சார பஸ்களை அரசே இயக்கி பயணிகளை மகிழ்விக்கிறது. அதே போல் சிறு நகரங்கள், ஊரகப்பகுதிகள் அதிகம் உள்ள விருதுநகர் போன்ற பகுதிகளுக்கு புதிதாக மின்சார மினி பஸ்களை அறிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே வட்டார போக்குவரத்து துறையினர் தற்போது செயல்பட்டு வரும் பஸ்கள் அறிவித்த வழித்தடங்களில் தான் இயங்குகிறதா என அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். இதை மாதம் ஒரு முறை கலெக்டர் நேரடி கள ஆய்வு செய்ய வேண்டும்.

