நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: விருதுநகர் மாவட்டம் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி புவியியலாளர் வெங்கடேஷ் 33, தலைமையில் அதிகாரிகள் நேற்று மதியம் 12: 10 மணிக்கு சாத்துார் மடத்துப்பட்டி ரோட்டில் சுப்பிரமணியபுரம் விலக்கில் வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக அனுமதி இன்றி 4 அரை யூனிட் எம் சாண்டுடன் வந்த இரு டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரி டிரைவர்கள் தப்பி ஓடினர். லாரியுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

