ADDED : ஜூன் 17, 2026 04:12 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி, ராஜபாளையம் மாயூரநாதசுவாமி, திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள், சிவகாசி விஸ்வநாத சுவாமி, அருப்புக்கோட்டை சொக்கநாத சுவாமி கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கான அறிவிப்பை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கீழ் 43,723 கோயில்கள் உள்ள நிலையில், பிரசித்தி பெற்ற மற்றும் அதிக வருவாய் உடைய 214 கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்க தற்போதைய தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான அறிவிப்பினை வெளி யிட்டுள்ளது.
கடந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் அரசியல் பின்புலம் உள்ள நபர்கள், தொழில திபர்கள் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது யாராக இருந் தாலும் இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க முடியும்.
இந்நிலையில் 214 கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சார் அறங்காவலர்கள் நியமிக்க தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை அறநிலையத்துறை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் ஆண்டாள், வைத்தியநாதர், மாயூரநாதர் சுவாமி, திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள், சிவகாசி விஸ்வநாதர் கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை ஜூலை 22 தேதிக்குள் www.hrce.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்தோ, நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ இணை ஆணையர், ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலகம், மதுரை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
