/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாநில கூடைப்பந்து போட்டி துாத்துக்குடி அணி வெற்றி
/
மாநில கூடைப்பந்து போட்டி துாத்துக்குடி அணி வெற்றி
ADDED : ஜூன் 24, 2025 03:00 AM
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நடந்தந மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் துாத்துக்குடி அணி வெற்றி பெற்றது.
ராஜபாளையம் எ.கா.த தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான கூடைப் பந்து போட்டிகள் மூன்று நாட்கள் நடந்தது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
புள்ளிகள் அடிப்படையில் தூத்துக்குடி ஹோலி கிராஸ் மேல்நிலைப்பள்ளி முதலிடம், செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும், சேலம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடமும் பிடித்தன.
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கிருஷ்ணம ராஜூ தலைமை வகித்தார். ராஜபாளையம் சிட்டி பேஸ்கட்பால் சங்க தலைவர் ராம்குமார் ராஜா, பொருளாளர் ராம் சிங் ராஜா வரவேற்றனர். மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் பாஸ்கரன், செயலாளர் சத்யம் பங்கேற்று பரிசு வழங்கினர்.
ஏற்பாடுகளை எ.கா.த.த டிரஸ்ட் சார்பில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.