/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொடர் டூவீலர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
/
தொடர் டூவீலர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
ADDED : ஜூன் 12, 2025 01:53 AM

சிவகாசி: சிவகாசி, சாத்துார், சேலத்தில் டூவீலர்கள் திருடிய இரு வாலிபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 3 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.
சிவகாசி கட்டளைப் பட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் தனது டூவீலரை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். மீண்டும் வந்து பார்க்கையில் டூவீலர் காணாமல் போனது.
சிவகாசி - - விளாம்பட்டி ரோட்டில் ஒத்தபுலி சந்திப்பில், மாரனேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் வந்த இருவரிடம் விசாரித்ததில் அவர்கள் வந்தது திருட்டு டூவீலர் என்பது தெரிந்தது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சவுடார்பட்டியை சேர்ந்த சந்திரசேகர் மகன் ஆறுமுகம் 20, சிவகாசி லட்சுமியாபுரத்தை சேர்ந்த முருகன் மகன் வீரமணி 23, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் இருவரும் சிவகாசி மட்டுமின்றி சாத்துார், சேலத்தில் டூவீலர் திருடியது தெரிந்தது. மேலும் அவர்களிடம் இருந்து மூன்று டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.