ADDED : மே 19, 2026 11:23 PM

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கூமாபட்டி அருகே இலவசமாக மதுபாட்டில்கள் தராததால் தனியார் மதுபான கடையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசிய ரமணி 43, ராஜா 45, ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
வத்திராயிருப்பு கூமாபட்டி நெடுங்குளம் ரோட்டில் உள்ள தனியார் மதுபான கடைக்கு நேற்று முன்தினம் மதியம் 1:00 மணிக்கு கூமாபட்டியைச் சேர்ந்த ரமணி, ராஜா, வீரய்யா ஆகியோர் ஒரு டூவீலரில் வந்து இலவசமாக மது பாட்டில்கள் கேட்டனர்.
கடை ஊழியர் மாயன் தர மறுத்ததால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமுற்ற மூவரும் கடைக்குள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து மாயன் அளித்த புகாரில் கூமாபட்டி போலீசார் தப்பிய மூவரையும் தனிப்படை அமைத்து தேடினர்.
நேற்று முன் தினம் இரவு தனிப்படை போலீசார் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் பதுங்கி இருந்த ரமணி, ராஜா ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான வீரையாவை தொடர்ந்து தேடுகின்றனர்.
